Google டோனை எப்படிப் பயன்படுத்துவது?
Google டோனைப் பயன்படுத்தி, URLஐ பரப்ப:
- உங்கள் Google கணக்கில் உள்நுழையவும்.
- பரப்ப விரும்பும் இணையப் பக்கம் திறந்திருக்கும் Chrome உலாவியிலுள்ள Google டோன் ஐகானைக் கிளிக் செய்யவும்.
Google டோன் எதற்கு?
நாம் பேசிக்கொள்வது போலவே, கணினிகள் தங்களிடையே தகவல் பரிமாற்றம் செய்துகொள்ள Google டோன் உதவும். உலாவி நீட்டிப்பான இது, Chromeஐப் பயன்படுத்தி உங்கள் கணினியின் ஸ்பீக்கர்களிலிருந்து சிறப்பு ஒலி அடையாளத்தை உண்டாக்கி, பிற கணினிகளின் மைக்ரோஃபோன்கள் அதை URL ஆக அடையாளங்காணும்படி செயல்படுத்தும்.
Google டோன் எவ்வாறு செயல்படுகிறது?
Google டோன் உங்கள் கணினியின் மைக்ரோஃபோனை (நீட்டிப்பு இயக்கத்தில் இருக்கும் போது) இயக்குகிறது. Google சேவையகங்களில் URLஐ தற்காலிகமாகச் சேகரித்து, உங்கள் கணினியின் ஸ்பீக்கர்களையும் மைக்ரோஃபோனையும் பயன்படுத்தி இணையத்துடன் இணைந்திருக்கும் அருகிலுள்ள கணினிகளுக்கு அதை Google டோன் அனுப்புகிறது. ஒலி எழுப்பினால் கேட்கக்கூடிய தூரத்தில் உள்ள எந்தக் கணினியிலும் Google டோன் நீட்டிப்பு நிறுவப்பட்டு, இயக்கப்பட்டிருந்தால், அது Google டோன் அறிவிப்பைப் பெறும். அறிவிப்பில், உங்கள் Google சுயவிவரப் பெயர், படத்துடன் URL தோன்றும்.
Google டோன் அனுப்பும் URLஐப் பெற, உங்கள் மைக்ரோஃபோன் இயக்கத்திலிருக்க வேண்டியது Chromeக்கு அவசியமாகிறது. இரைச்சல் அதிகம் உள்ள பகுதிகளில், அதிக தொலைவில் உள்ள, வேகம் குறைந்த இணைய இணைப்பு கொண்ட அல்லது மைக்ரோஃபோன் இல்லாத அல்லது Google டோன் எழுப்பும் ஒலிபரப்பை அறியும் திறனற்ற மைக்ரோஃபோனைக் கொண்ட கணினிகளில் Google டோன் வேலை செய்யாது.
எனது தரவை Google டோன் எவ்வாறு பயன்படுத்தும்?
Google இன் தனியுரிமைக் கொள்கையின்படி அநாமதேயப் பயன்பாட்டுத் தரவை Google டோன் சேகரிக்கும்.
அதை இயக்குவது & முடக்குவது எப்படி?
Google டோனை (மைக்ரோஃபோன் உட்பட) இயக்கவும், முடக்கவும் Chrome நீட்டிப்பு அமைப்புகளுக்குச் செல்லவும்.
இது பாதுகாப்பானதா?
Google டோன், URLகளை மட்டுமே பரப்புவதால், சாதாரணமாக அணுகல் இல்லாத பக்கத்தை பெறுநர்கள் தானாக அணுக முடியாது. எடுத்துக்காட்டாக, உங்கள் Gmail இன்பாக்ஸ் URLஐ வலைபரப்பினால், Google டோன் அறிவிப்பைக் கிளிக் செய்யும் பெறுநர்கள் தங்களது Gmail இல் உள்நுழையும் படி அறிவுறுத்தப்படுவார்கள். எனினும், Google டோன் வலைபரப்புகள் யாவும் பொதுவில் இடம்பெறுபவையாக வடிவமைக்கப்பட்டுள்ளதால், ரகசியத் தகவலைப் பரிமாற்ற அவற்றைப் பயன்படுத்தாமல் இருப்பது சிறந்தது.